இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1594ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا وَاصِلٌ الأَحْدَبُ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ جِئْتُ إِلَى شَيْبَةَ‏.‏ وَحَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ جَلَسْتُ مَعَ شَيْبَةَ عَلَى الْكُرْسِيِّ فِي الْكَعْبَةِ فَقَالَ لَقَدْ جَلَسَ هَذَا الْمَجْلِسَ عُمَرُ ـ رضى الله عنه ـ فَقَالَ لَقَدْ هَمَمْتُ أَنْ لاَ أَدَعَ فِيهَا صَفْرَاءَ وَلاَ بَيْضَاءَ إِلاَّ قَسَمْتُهُ‏.‏ قُلْتُ إِنَّ صَاحِبَيْكَ لَمْ يَفْعَلاَ‏.‏ قَالَ هُمَا الْمَرْآنِ أَقْتَدِي بِهِمَا‏.‏
அபூவாயில் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் கஅபாவிற்குள் இருந்த நாற்காலியில் ஷைபா (ரழி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவர் (ஷைபா) கூறினார்கள்: "உமர் (ரழி) அவர்கள் (முன்பொருமுறை) இதே இடத்திலேயே அமர்ந்திருந்தார்கள். (அப்போது அவர்கள் என்னிடம்,) 'கஅபாவிற்குள் இருக்கும் எந்தவொரு மஞ்சள் (தங்கம்) மற்றும் வெள்ளை (வெள்ளி)யையும் (மக்களுக்குப்) பங்கிடாமல் விட்டுவிடக்கூடாது என்று நான் எண்ணியிருந்தேன்' என்று கூறினார்கள்.
(அதற்கு) நான் (உமர் அவர்களிடம்), 'உங்களுடைய இரு தோழர்கள் (நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும்) அவ்வாறு செய்யவில்லையே!' என்று கூறினேன். (அதற்கு உமர்,) 'அவர்கள் இருவருமே நான் பின்பற்றும் வழிகாட்டிகள் ஆவர் (எனவே நானும் அவ்வாறு செய்யமாட்டேன்)' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح