அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் உங்களுக்கு எதைத் தடை செய்தேனோ, அதைத் தவிர்த்துவிடுங்கள். நான் உங்களுக்கு எதைக் கட்டளையிட்டேனோ, அதை உங்களால் இயன்ற அளவுக்குச் செயல்படுத்துங்கள். ஏனெனில், உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம், அவர்கள் அதிகமான கேள்விகளைக் கேட்டதும், தங்கள் நபிமார்களுடன் முரண்பட்டதுமேயாகும்."