(பொருள்: "அல்லாஹ்வே! வேதத்தை அருளியவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இந்தக் கூட்டத்தினரை (அதாவது, அகழ் போரில் ஒன்றுதிரண்ட எதிரிக் கூட்டத்தினரை) தோற்கடிப்பாயாக! யா அல்லாஹ்! அவர்களைத் தோற்கடித்து, அவர்களை நிலைகுலையச் செய்வாயாக!")
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيعَ الْحِسَابِ، اهْزِمِ الأَحْزَابَ وَزَلْزِلْ بِهِمْ . زَادَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ أَبِي خَالِدٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப்போரின் (அஹ்ஸாப்) போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! வேதத்தை அருளியவனே! விரைவாகக் கணக்குத் தீர்ப்பவனே! (எதிரிகளின்) கூட்டமைப்பினரைத் தோற்கடிப்பாயாக! அவர்களை நிலைகுலையச் செய்வாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ் யுத்தத்தின்போது மதீனாவை முற்றுகையிட்ட எதிரிக்) கூட்டத்தினருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: