حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ بِطَرِيقِ مَكَّةَ، فَبَلَغَهُ عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ شِدَّةُ وَجَعٍ فَأَسْرَعَ السَّيْرَ، حَتَّى كَانَ بَعْدَ غُرُوبِ الشَّفَقِ نَزَلَ، فَصَلَّى الْمَغْرِبَ وَالْعَتَمَةَ، جَمَعَ بَيْنَهُمَا، ثُمَّ قَالَ إِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم إِذَا جَدَّ بِهِ السَّيْرُ أَخَّرَ الْمَغْرِبَ، وَجَمَعَ بَيْنَهُمَا.
அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மக்கா செல்லும் வழியில் இருந்தேன். அப்போது (அவர்களின் மனைவி) ஸஃபிய்யா பின்த் அபூ உபைது அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாக அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. எனவே, அவர்கள் பயண வேகத்தை அதிகரித்தார்கள். செவ்வானம் மறைந்ததும், அவர்கள் (வாகனத்திலிருந்து) இறங்கி மஃரிப் மற்றும் இஷா (ஆகிய இரு) தொழுகைகளையும் சேர்த்துத் தொழுதார்கள். பின்னர் அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தால், மஃரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி, அவ்விரண்டையும் (மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளைச்) சேர்த்துத் தொழுவார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன்."