இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4895மிஷ்காத் அல்-மஸாபீஹ்
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: فِي يَوْمِ حُنَيْنٍ كَانَ أَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ آخِذًا بِعِنَانِ بَغْلَتِهِ يَعْنِي بَغْلَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا غَشِيَهُ الْمُشْرِكُونَ نَزَلَ فَجَعَلَ يَقُولُ «أَنَا النَّبِيُّ لَا كَذِبَ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ» قَالَ: فَمَا رُئِيَ مِنَ النَّاسِ يَوْمَئِذٍ أَشَدُّ مِنْهُ. مُتَّفق عَلَيْهِ
பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஹுனைன் (போர்) நாளில், அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரழி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்) கோவேறு கழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இணைவைப்பாளர்கள் அவர்களை (நபியவர்களை)ச் சூழ்ந்து கொண்டபோது, அவர்கள் (வாகனத்திலிருந்து) கீழே இறங்கி, "நான் (அல்லாஹ்வின்) தூதர், (இதில்) பொய்யில்லை; நான் அப்துல் முத்தலிபின் மகன் (பேரன்) ஆவேன்!" என்று கூறலானார்கள்.

(அறிவிப்பாளர்) கூறுகிறார்: அந்நாளில் மக்களில் அவர்களை (நபியவர்களை) விட அதிக வீரமிக்கவர் (எவரும்) காணப்படவில்லை.

(முத்தஃபகுன் அலைஹி)
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح