أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حُمَيْدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தை (அல்லது வசனங்களை) எங்களுக்குக் கற்றுக் கொடுப்பதைப் போலவே தஷஹ்ஹுதையும் எங்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள்."