இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் வாலிபனாகவும், திருமணமாகாதவனாகவும் இருந்தபோது மஸ்ஜிதில் உறங்குவது வழக்கம். நாய்கள் மஸ்ஜிதிற்குள் வந்து போய்க்கொண்டும், சிறுநீர் கழித்துக்கொண்டும் இருக்கும். ஆனால், (அவை சிறுநீர் கழித்த) அந்த இடத்தில் எதையும் (தண்ணீர் தெளித்து) சுத்தம் செய்ய மாட்டார்கள்.