இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4546ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا رَوْحٌ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ مَرْوَانَ الأَصْفَرِ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ـ قَالَ أَحْسِبُهُ ابْنَ عُمَرَ ـ ‏{‏إِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ‏}‏ قَالَ نَسَخَتْهَا الآيَةُ الَّتِي بَعْدَهَا‏.‏
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் (அவர் இப்னு உமர் (ரலி) என அறிவிப்பாளர் கருதுகிறார்) கூறியதாவது:
"{இன் துப்தூ மா ஃபீ அன்ஃபுஸிக்கும் அவ் துக்ஃபூஹு} (உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்தாலும், அல்லாஹ் அதற்காக உங்களைக் கணக்கு கேட்பான்)" எனும் (குர்ஆன் 2:284ஆவது) வசனத்தை, அதனைத் தொடரும் வசனம் (குர்ஆன் 2:286) ரத்து செய்துவிட்டது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح