சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துர்ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்களிடம், மன்ஸூர் (ரஹ்) அவர்கள் இப்ராஹீம் (ரஹ்) மற்றும் அல்கமா (ரஹ்) ஆகியோர் வழியாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸைக் குறிப்பிட்டேன். அதற்கு அவர்கள், "நான் அதனை உம்மு யஃகூப் வழியாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து, மன்ஸூர் அறிவித்த ஹதீஸைப் போலவே செவியுற்றேன்" என்று கூறினார்கள்.