இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

271bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو كُرَيْبٍ - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ عُلَيَّةَ - حَدَّثَنِي رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَبَرَّزُ لِحَاجَتِهِ فَآتِيهِ بِالْمَاءِ فَيَتَغَسَّلُ بِهِ ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இயற்கைக்கடனை நிறைவேற்றுவதற்காக (மக்களின் பார்வையிலிருந்து மறைந்து, திறந்த) வெளியிடம் செல்வார்கள். அப்போது நான் அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு வருவேன்; அவர்கள் அதைக் கொண்டு தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح