சுலைமான் இப்னு யசார் அவர்கள் அறிவித்தார்கள்:
ஆயிஷா (ரழி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து விந்துவைக் கழுவுவேன்” என்று கூறக் கேட்டேன். மேலும் அவர்கள், “பிறகு நான் (கழுவிய பின்னரும்) அதில் ஒரு தடம் அல்லது தடங்களைக் காண்பேன்” என்றும் கூறினார்கள்.