உபை இப்னு கஅப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒருவர் தம் மனைவியுடன் கூடி, பின்னர் (விந்து வெளியேறும் முன்பே) களைப்படைந்து விடுபவர் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர் அப்பெண்ணிடமிருந்து தமக்குத் தொற்றிக்கொண்டதைக் கழுவிவிட்டு, பின்னர் உளூச் செய்து தொழ வேண்டும்” என்று கூறினார்கள்.