ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
எங்களில் (நபியவர்களின் மனைவிகளாகிய) ஒவ்வொருவருக்கும் மாதவிடாய் காலத்தில் உடுத்துவதற்கு ஒரேயொரு ஆடைதான் இருந்தது. அதில் ஏதேனும் இரத்தம் பட்டால், அதைத் தமது உமிழ்நீரால் ஈரப்படுத்தி, பின்னர் (விரல் அல்லது நகத்தால்) உமிழ்நீரால் தேய்த்து (அழுக்கைப் போக்கி) விடுவார்கள்.