இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

355ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ، قَدْ أَلْقَى طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ‏.‏
உமர் பின் அபீ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான், உம்மு ஸலமா (ரழி) அவர்களின் இல்லத்தில் நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை (அவசியமான பகுதிகளை மறைக்கும் விதமாக) உடுத்தி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்கள்மீது (கீழே விழாதவாறு) மாற்றிப் போட்டிருந்த நிலையில் தொழுததை கண்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
517 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ فِي ثَوْبٍ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ ‏.‏
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில் ஒரே ஆடையை (உடலைச் சுற்றிக்கட்டி) அதன் இரு ஓரங்களையும் ஒன்றோடொன்று குறுக்காகப் போட்டு அணிந்தவர்களாகத் தொழுதுகொண்டிருந்ததை பார்த்தேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح