முகீரா பின் ஷுஃபா (ரழி) அறிவித்தார்கள்:
நான் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், "முகீரா! இந்தத் (தண்ணீர்) குவளையை எடுத்துக்கொள்" என்று கூறினார்கள். நான் அதை எடுத்துக்கொண்டேன்; பின்னர் அவர்களுடன் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் பார்வையை விட்டு மறையும் வரை (முன்னேறிச்) சென்றார்கள். அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டுப் பின்னர் வந்தார்கள். அவர்கள் கைகள் இறுக்கமான சிரிய நாட்டு அங்கி ஒன்றை அணிந்திருந்தார்கள். அவர்கள் தங்கள் கையை (அங்கியின்) கை வழியாக வெளியே எடுக்க முயன்றார்கள். ஆனால் அங்கியின் கை அவர்களுக்கு மிகவும் இறுக்கமாக இருந்தது. எனவே அவர்கள் தங்கள் கைகளை அங்கிக்குக் கீழிருந்து வெளியே எடுத்தார்கள். நான் (அவர்கள்) மீது தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்குச் செய்வதைப் போன்று உளூச் செய்தார்கள். பின்னர் தங்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள்; பின்னர் தொழுதார்கள்.