ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கிழக்கு திசையை முன்னோக்கி தங்கள் வாகனத்தின் மீது (நபிலான தொழுகைகளை) தொழுவார்கள். மேலும், அவர்கள் கடமையான தொழுகையை நிறைவேற்ற விரும்பும்போதெல்லாம், (வாகனத்திலிருந்து) இறங்கி கிப்லாவை முன்னோக்குவார்கள்.