حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ خَمْسًا فَقِيلَ لَهُ أَزِيدَ فِي الصَّلاَةِ فَقَالَ وَمَا ذَاكَ . قَالَ صَلَّيْتَ خَمْسًا. فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ.
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள், அப்போது ஒருவர் அவர்களிடம், "தொழுகையில் ஏதேனும் அதிகரிக்கப்பட்டுவிட்டதா?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது என்ன?" என்று கேட்டார்கள்.
அவர், "நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர்கள்" என்றார்.
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஸ்லீம் கொடுத்த பின்னர் ஸஹ்வுக்கான இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹர் தொழுகையை நடத்தினார்கள், (அதில்) ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். ஒருவர் அவர்களிடம், "தொழுகை அதிகரிக்கப்பட்டுவிட்டதா?" என்று கேட்டார். அவர்கள் (நபி (ஸல்) அவர்கள்), "அது என்ன?" என்று கேட்டார்கள். அவர்கள் (மக்கள்), "நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தஸ்லீம் கூறி தங்களின் தொழுகையை முடித்த பிறகு இரண்டு ஸஜ்தாக்களை (ஸஹ்வுடைய ஸஜ்தாக்களை) செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ളുஹர் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள், அவர்கள் தொழுகையை முடித்தபோது, அவர்களிடம் கேட்கப்பட்டது: தொழுகையில் (ஏதேனும்) கூட்டப்பட்டுள்ளதா? அவர்கள் கேட்டார்கள்: அது என்ன? அவர்கள் கூறினார்கள்: தாங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுதுள்ளீர்கள், எனவே, அவர்கள் இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.
'அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"நபி (ஸல்) அவர்கள் ளுஹர் தொழுகையை ஐந்து ரக்அத்களாகத் தொழுதார்கள். அப்போது அவர்களிடம், 'தொழுகையில் ஏதேனும் கூட்டப்பட்டுவிட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஏன் கேட்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நீங்கள் ஐந்து (ரக்அத்கள்) தொழுதீர்கள்' என்று கூறினார்கள். எனவே அவர்கள் திரும்பி இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ளுஹர் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். தொழுகை நீட்டப்பட்டுவிட்டதா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுதீர்கள்” என்று கூறினர். பிறகு அவர்கள் ஸலாம் கொடுத்த பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَأَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي الْحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: صَلَّى النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ الظُّهْرَ خَمْسًا. فَقِيلَ لَهُ: أَزِيدَ فِي الصَّلاَةِ؟ قَالَ وَمَا ذَاكَ؟ . فَقِيلَ لَهُ . فَثَنَى رِجْلَهُ، فَسَجَدَ سَجْدَتَيْنِ .
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையை ஐந்து ரக்அத்களாகத் தொழுதார்கள். அப்போது அவர்களிடம், 'தொழுகையில் ஏதேனும் கூட்டப்பட்டுவிட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அது என்ன?' என்று கேட்டார்கள். அவர்கள் அதைத் தெரிவித்ததும், அவர்கள் கிப்லாவை நோக்கித் திரும்பி இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்."