حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِصَبِيٍّ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் (ஆண்) குழந்தை கொண்டுவரப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. உடனே அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அதை (சிறுநீரின் மீது) ஊற்றினார்கள்.”
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ أَوْ مُخَاطًا أَوْ نُخَامَةً فَحَكَّهُ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லா திசையிலுள்ள சுவரில் எச்சில் அல்லது மூக்குச்சளி அல்லது கோழை ஒட்டியிருப்பதைக் கண்டார்கள்; அதை அவர்கள் சுரண்டி அகற்றினார்கள்.