حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ سَهْلٍ، أَخِي بَنِي سَاعِدَةَ أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَلاَعَنَا فِي الْمَسْجِدِ وَأَنَا شَاهِدٌ.
சஹல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(பனூ சாஇதா கோத்திரத்தாரின் சகோதரர்) அன்சாரிகளில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள், “ஒருவர் தம் மனைவியுடன் இன்னொரு ஆண் படுத்திருப்பதைக் கண்டால், அவரைக் கொன்றுவிடலாமா?” பின்னர் அந்த மனிதரும் அவருடைய மனைவியும் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பள்ளிவாசலில் லிஆன் செய்தார்கள்.