وعن السائب بن زيد الصحابي رضي الله عنه قال: كنت في المسجد فحصبني رجل، فنظرت فإذا عمر بن الخطاب رضي الله عنه فقال: اذهب فائتني بهذين، فجئته بهما، فقال: من أين أنتما؟ فقالا: من أهل الطائف، فقال: لو كنتما من أهل البلد، لأوجعتكما، ترفعان أصواتكما في مسجد رسول الله صلى الله عليه وسلم ! ((رواه البخاري)).
அஸ்-ஸாயிப் பின் ஸைத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் பள்ளிவாசலில் இருந்தபோது, ஒருவர் என் மீது ஒரு சிறுகல்லை எறிந்தார். நான் பார்த்தபோது, அங்கு உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் இருப்பதைக் கண்டேன். அவர்கள், "சென்று, இவ்விருவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். நான் அவ்விருவரையும் அவரிடம் அழைத்து வந்தேன். அவர், "நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "தாயிஃப் வாசிகள்" என்றனர். அதற்கு அவர், "நீங்கள் இருவரும் இவ்வூர் வாசிகளாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் உங்கள் குரல்களை உயர்த்தியதற்காக நான் உங்களை அடித்திருப்பேன் (கடுமையாகத் தண்டித்திருப்பேன்)" என்று கூறினார்கள்.