حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنِي ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ، بَيْدَ كُلُّ أُمَّةٍ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَا مِنْ بَعْدِهِمْ، فَهَذَا الْيَوْمُ الَّذِي اخْتَلَفُوا، فَغَدًا لِلْيَهُودِ وَبَعْدَ غَدٍ لِلنَّصَارَى ". "عَلَى كُلِّ مُسْلِمٍ فِى كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمٌ يَغْسِلُ رَأْسَهُ وَجَسَدَهُ"
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நாம் (காலத்தால்) கடைசியாக வந்தவர்கள்; ஆனால் மறுமை நாளில் நாம் முதன்மையானவர்களாக இருப்போம். நமக்கு முன் இருந்த சமுதாயங்களுக்கு வேதம் வழங்கப்பட்டது, அவர்களுக்குப் பிறகு நமக்கும் புனித வேதம் வழங்கப்பட்டது. இது (வெள்ளிக்கிழமை) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே, யூதர்களுக்கு அடுத்த நாளும் (சனிக்கிழமை), கிறிஸ்தவர்களுக்கு அதற்கடுத்த நாளும் (ஞாயிற்றுக்கிழமை) குறிக்கப்பட்டது. ஒவ்வொரு ஏழு நாட்களிலும் (குறைந்தபட்சம்) ஒரு நாளில் (வெள்ளிக்கிழமை), ஒவ்வொரு முஸ்லிமும் தன் தலையையும் உடலையும் கழுவுவது கடமையாகும்.”