இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4862ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سَجَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالنَّجْمِ وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْجِنُّ وَالإِنْسُ‏.‏ تَابَعَهُ ابْنُ طَهْمَانَ عَنْ أَيُّوبَ‏.‏ وَلَمْ يَذْكُرِ ابْنُ عُلَيَّةَ ابْنَ عَبَّاسٍ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (குர்ஆனின் 53வது அத்தியாயமான) அந்நஜ்ம் சூராவில் (ஸஜ்தா வசனத்தை ஓதியபோது) ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஜின்களும், மனிதர்களும் ஸஜ்தாச் செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح