حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ عَلَيْنَا السُّورَةَ فِيهَا السَّجْدَةُ، فَيَسْجُدُ وَنَسْجُدُ، حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَوْضِعَ جَبْهَتِهِ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா (சிரவணக்க வசனம்) உள்ள ஒரு சூராவை எங்களுக்கு ஓதிக்காட்டுவார்கள். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள்; நாங்களும் ஸஜ்தாச் செய்வோம். எங்களில் ஒருவருக்குத் தமது நெற்றியை வைக்கவும் இடம் கிடைக்காத அளவுக்கு (நெருக்கமாக இருந்தோம்).
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் சஜ்தா (வசனத்தை) ஓதுவார்கள்; நாங்கள் அவர்களுடன் இருப்போம். அவர்கள் சஜ்தாச் செய்வார்கள்; நாங்களும் அவர்களுடன் சஜ்தாச் செய்வோம். எங்களில் ஒருவருக்குத் தமது நெற்றியை வைத்து சஜ்தாச் செய்ய இடம் கிடைக்காத அளவுக்கு நாங்கள் நெருக்கியடித்துக் கொள்வோம்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தபோது, அதில் சஜ்தா (வசனம்) உள்ள சூராவை ஓதி சஜ்தா செய்தார்கள். நாங்களும் அவர்களுடன் சஜ்தா செய்தோம். (ஆனால் நாங்கள் மிகவும் நெரிசலாக இருந்தோம்) எங்களில் சிலருக்கு (சஜ்தா செய்யும்போது) தங்கள் நெற்றியை வைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு சூராவை ஓதிக் காட்டுவார்கள். (இப்னு நுமைர் குறிப்பிடுகிறார்: அது தொழுகைக்கு வெளியே நடந்தது. இந்த விஷயத்தில் மற்ற அறிவிப்பாளர்களும் இப்னு நுமைருடன் உடன்பட்டனர்.) பிறகு அவர்கள் சஜ்தா செய்வார்கள்; நாங்களும் அவர்களுடன் சஜ்தா செய்வோம். எங்களில் எவராலும் தன் நெற்றியை வைப்பதற்கு ஓர் இடத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாது (அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது).