حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ، وَمَعَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ رَكْعَتَيْنِ وَمَعَ عُمَرَ ـ رضى الله عنه ـ رَكْعَتَيْنِ، ثُمَّ تَفَرَّقَتْ بِكُمُ الطُّرُقُ، فَيَا لَيْتَ حَظِّي مِنْ أَرْبَعٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நான் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இரண்டு ரக்அத்கள் தொழுதேன்; அவ்வாறே அபூபக்ர் (ரழி) அவர்களுடனும் இரண்டு ரக்அத்கள் (தொழுதேன்); உமர் (ரழி) அவர்களுடனும் இரண்டு ரக்அத்கள் (தொழுதேன்). பின்னர் உங்கள் வழிகள் பிரிந்துவிட்டன. அந்த நான்கு (ரக்அத்களிலிருந்து எனக்குக் கிடைக்கும்) என் பங்கு, ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்களாக இருக்கவேண்டுமே என நான் விரும்புகிறேன்."
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் மினாவில் எங்களுக்கு நான்கு ரக்அத்கள் தொழுவித்தார்கள். இச்செய்தி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. உடனே அவர்கள், "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" என்று கூறினார்கள். பிறகு, "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதேன். அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதேன். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதேன். நான்கு ரக்அத்களில், (இறைவனிடம்) ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்களே என் பங்காக இருக்க நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.