அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் மிஸ்வாக் (பல் குச்சி) பயன்படுத்துங்கள். ஏனெனில், மிஸ்வாக் வாயைத் தூய்மைப்படுத்தும், ரப்புவை திருப்திப்படுத்தக் கூடியது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வரும்போதெல்லாம் மிஸ்வாக் பயன்படுத்தும்படி எனக்கு அறிவுரை கூறினார்கள். எந்த அளவிற்கு என்றால், அது எனக்கும் என் உம்மத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு (அவர்கள் அறிவுரை கூறினார்கள்). என் உம்மத்திற்கு நான் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்று அஞ்சாமல் இருந்திருந்தால், நான் அதை அவர்களுக்குக் கடமையாக்கியிருப்பேன். நான் எனது வாயின் முன்பகுதியை புண்ணாக்கி விடுவேனோ என்று அஞ்சும் அளவிற்கு நான் மிஸ்வாக் பயன்படுத்துகிறேன்.' (அதாவது என் ஈறுகள்) (அல்லது அடிக்கடி பல் துலக்குவதால் என் பற்கள் விழுந்து விடுமோ)."
وعن عائشة رضي الله عنها ان النبي صلى الله عليه وسلم : قال: السواك مطهرة للفم مرضاة للرب ((رواه النسائي، وابن خذيمة في صحيحه بأسانيد صحيحة)).
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "மிஸ்வாக் (பல் துலக்கும் குச்சி) வாயைத் தூய்மைப்படுத்தக்கூடியது; ரப்பைத் திருப்திப்படுத்தக்கூடியது."