இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

152ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُ الْخَلاَءَ، فَأَحْمِلُ أَنَا وَغُلاَمٌ إِدَاوَةً مِنْ مَاءٍ، وَعَنَزَةً، يَسْتَنْجِي بِالْمَاءِ‏.‏ تَابَعَهُ النَّضْرُ وَشَاذَانُ عَنْ شُعْبَةَ‏.‏ الْعَنَزَةُ عَصًا عَلَيْهِ زُجٌّ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக்கடனை நிறைவேற்ற (கழிப்பறைக்கு)ச் செல்லும்போதெல்லாம், நானும் ஒரு சிறுவனும் தண்ணீர் நிரம்பிய ஒரு தோல் பாத்திரத்தையும், ‘அனஸா’ எனும் (முனையில் கூர்மையான இரும்பு கொண்ட) கைத்தடியையும் எடுத்துச் செல்வது வழக்கம். அவர் அந்தத் தண்ணீரால் (தம்மை) சுத்தம் செய்துகொள்வார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح