حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ ـ هُوَ الدَّسْتَوَائِيُّ ـ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ، وَإِذَا أَتَى الْخَلاَءَ فَلاَ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِهِ .
அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் எவரேனும் தண்ணீர் அருந்தினால், அவர் அருந்தும் பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம், மேலும், உங்களில் எவரேனும் கழிவறைக்குச் சென்றால், அவர் தமது ஆண் குறியைத் தமது வலது கையால் தொட வேண்டாம்; அன்றியும் தமது வலது கையால் தம் மறைவிடத்தைச் சுத்தம் செய்ய வேண்டாம்."
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் எவரேனும் சிறுநீர் கழிக்கும்போது அவர் தமது ஆணுறுப்பைத் தமது வலது கையால் பிடிக்க வேண்டாம் அல்லது தமது மறைவிடத்தை வலது கையால் சுத்தம் செய்ய வேண்டாம். (மேலும் குடிக்கும்போது) குடிக்கும் பாத்திரத்தினுள் யாரும் மூச்சுவிட வேண்டாம்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நீங்கள் (தண்ணீர்) அருந்தும்போது, பாத்திரத்தினுள் மூச்சு விடாதீர்கள்; நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, உங்கள் வலது கையால் உங்கள் ஆண் குறியைத் தொடாதீர்கள். மேலும், நீங்கள் மலம் கழித்தபின் சுத்தம் செய்யும்போது, உங்கள் வலது கையைப் பயன்படுத்தாதீர்கள்.”
அபூ கதாதா (ரழி) அவர்கள் தம் தந்தையார் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் சிறுநீர் கழிக்கும்போது தனது வலது கையால் ஆண் குறியைப் பிடிக்கக் கூடாது; அல்லது கழிவறையில் தனது வலது கையால் தன்னைத் துடைத்துக்கொள்ளக் கூடாது; மேலும் (தான் குடிக்கும்) பாத்திரத்தினுள் மூச்சு விடவும் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது, அவர் தனது வலது கையால் தனது ஆண் குறியைத் தொடக்கூடாது, மேலும், அவர் மலஜலம் கழிக்கும்போது தனது வலது கையால் சுத்தம் செய்யக்கூடாது, மேலும், அவர் குடிக்கும்போது ஒரே மூச்சில் குடிக்கக்கூடாது.