இணைவைப்பாளர்கள் எங்களிடம், "உங்கள் தோழர் உங்களுக்கு (மார்க்கத்தின்) அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறார்; மலம் கழிக்கும் முறையையும்கூடவா?" என்று கூறினர். அதற்கு (சல்மான்) அவர்கள், "ஆம்! எங்களில் எவரும் தமது வலது கையால் சுத்தம் செய்வதையோ, அல்லது கிப்லாவை முன்னோக்குவதையோ அவர் (ஸல்) எங்களுக்குத் தடை செய்துள்ளார்கள். மேலும் சாணம் மற்றும் எலும்பைக் கொண்டு (சுத்தம் செய்வதையும்) அவர் தடுத்துள்ளார்கள். 'உங்களில் எவரும் மூன்று கற்களுக்குக் குறைவாகக் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது' என்றும் அவர் கூறியுள்ளார்" என்று பதிலளித்தார்கள்.