ஒரு கிராமவாசி எழுந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தார். மக்கள் அவரைத் தடுத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம், “அவரை விட்டுவிடுங்கள்; அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீர் அல்லது ஒரு குடம் தண்ணீரை ஊற்றுங்கள். ஏனெனில், நீங்கள் எளிதாக்குபவர்களாகவே அனுப்பப்பட்டுள்ளீர்கள்; சிரமப்படுத்துபவர்களாக அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள்.
ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தார். மக்கள் அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி விரைந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை விட்டுவிடுங்கள். அவர் சிறுநீர் கழித்ததன் மீது ஒரு வாளித் தண்ணீரை -அல்லது நீர் நிரம்பிய ஒரு வாளியை- ஊற்றுங்கள். ஏனெனில், நீங்கள் (மக்களுக்குக் காரியங்களை) எளிதாக்குபவர்களாகவே அனுப்பப்பட்டுள்ளீர்கள்; சிரமப்படுத்துபவர்களாக அனுப்பப்படவில்லை" என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"ஒரு கிராமவாசி எழுந்து நின்று பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தார், அதனால் மக்கள் அவரைப் பிடித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களிடம் கூறினார்கள்: 'அவரை விட்டுவிடுங்கள், அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள். ஏனெனில் நீங்கள் (மக்களுக்கு) இலகுபடுத்துபவர்களாகவே அனுப்பப்பட்டுள்ளீர்கள், சிரமத்தை ஏற்படுத்துபவர்களாக அனுப்பப்படவில்லை.'"