حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، - وَاللَّفْظُ لِعَبْدٍ - قَالاَ أَخْبَرَنَا عَبْدُ،
الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ الرَّجُلُ فِي حَيَاةِ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَأَى رُؤْيَا قَصَّهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَمَنَّيْتُ
أَنْ أَرَى رُؤْيَا أَقُصُّهَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَكُنْتُ غُلاَمًا شَابًّا عَزَبًا وَكُنْتُ
أَنَامُ فِي الْمَسْجِدِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرَأَيْتُ فِي النَّوْمِ كَأَنَّ مَلَكَيْنِ
أَخَذَانِي فَذَهَبَا بِي إِلَى النَّارِ فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَىِّ الْبِئْرِ وَإِذَا لَهَا قَرْنَانِ كَقَرْنَىِ الْبِئْرِ وَإِذَا
فِيهَا نَاسٌ قَدْ عَرَفْتُهُمْ فَجَعَلْتُ أَقُولُ أَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ أَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ أَعُوذُ
بِاللَّهِ مِنَ النَّارِ - قَالَ - فَلَقِيَهُمَا مَلَكٌ فَقَالَ لِي لَمْ تُرَعْ . فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ فَقَصَّتْهَا
حَفْصَةُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِعْمَ الرَّجُلُ
عَبْدُ اللَّهِ لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ . قَالَ سَالِمٌ فَكَانَ عَبْدُ اللَّهِ بَعْدَ ذَلِكَ لاَ يَنَامُ مِنَ اللَّيْلِ
إِلاَّ قَلِيلاً .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில், ஒரு மனிதர் கனவு கண்டால் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரிப்பார். நானும் ஒரு கனவு காண வேண்டும், அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் (அக்காலத்தில்) திருமணமாகாத இளைஞனாக இருந்தேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலில் உறங்குபவனாக இருந்தேன்.
நான் தூக்கத்தில், இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்கு கொண்டு செல்வதைப் போன்று கண்டேன். அது கிணறு கட்டப்பட்டிருப்பதைப் போன்று (சுவர்) கட்டப்பட்டிருந்தது. கிணற்றுக்கு இருப்பதைப் போன்று அதற்கு இரண்டு விளிம்புகள் இருந்தன. அதில் எனக்குத் தெரிந்த மக்கள் சிலர் இருந்தனர். உடனே நான்:
என்று சொல்லலானேன். அப்போது அவர்களை (அந்த இரு வானவர்களையும்) வேறொரு வானவர் சந்தித்து என்னிடம், "நீ அஞ்சாதே" என்று கூறினார். இதை நான் ஹஃப்ஸா (ரழி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரழி) அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் மிகச் சிறந்த மனிதர்; அவர் இரவில் தொழுபவராக இருந்தால் (அவருக்கு இன்னும் சிறப்பு) இருக்கும்" என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அதன் பிறகு அப்துல்லாஹ் (ரழி) இரவில் குறைவாகவே தூங்குபவராக இருந்தார்.
وعن سالم بن عبد الله بن عمر بن الخطاب، رضي الله عنهم، عن أبيه: أن رسول الله صلى الله عليه وسلم ، قال: نعم الرجل عبد الله لو كان يصلي من الليل قال سالم: فكان عبد الله بعد ذلك لا ينام إلا قليلا. ((متفق عليه))
ஸாலிம் பின் அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள், தன் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அப்துல்லாஹ் எத்தகைய சிறந்த மனிதர்! அவர் இரவில் தொழுபவராக இருந்திருந்தால் (நன்றாக இருந்திருக்கும்).”
ஸாலிம் அவர்கள் கூறினார்கள்: “அதற்குப் பிறகு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் இரவில் குறைவாகவே உறங்கக் கூடியவராக இருந்தார்.”
(புகாரி, முஸ்லிம்)