حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَلاَ أُخْبِرُكُمْ بِوُضُوءِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ செய்த முறையை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" பிறகு அவர்கள் (தாமே, ஒவ்வொரு உறுப்பையும்) ஒரு முறை கழுவி உளூ (செய்து) காட்டினார்கள்.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ سُفْيَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ غُرْفَةً غُرْفَةً .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உளூவின்) ஒவ்வொரு உறுப்பையும் கழுவுவதற்கு ஒரு கைப்பிடி (தண்ணீர்) எடுத்து உளூ செய்வதை நான் கண்டேன்."