இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

102சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، قَالَ حَدَّثَنَا ابْنُ عَجْلاَنَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَغَرَفَ غَرْفَةً فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ وَجْهَهُ ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُمْنَى ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُسْرَى ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ بَاطِنِهِمَا بِالسَّبَّاحَتَيْنِ وَظَاهِرِهِمَا بِإِبْهَامَيْهِ ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُمْنَى ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُسْرَى ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வுழூ செய்தார்கள்; அவர்கள் ஒரு கையளவு (தண்ணீர்) அள்ளி, அதனால் வாய் கொப்பளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பிறகு, மற்றொரு கையளவு அள்ளித் தமது முகத்தைக் கழுவினார்கள். பிறகு, மற்றொரு கையளவு அள்ளித் தமது வலது கையையும், பின்னர் மற்றொரு கையளவு அள்ளித் தமது இடது கையையும் கழுவினார்கள். பிறகு, அவர்கள் தமது தலை மற்றும் காதுகளுக்கு மஸஹ் செய்தார்கள்; காதுகளின் உட்பகுதியைத் தமது ஆள்காட்டி விரலாலும், வெளிப்பகுதியைத் தமது பெருவிரலாலும் (மஸஹ் செய்தார்கள்). பிறகு, ஒரு கையளவு தண்ணீர் அள்ளித் தமது வலது காலையும், மற்றொரு கையளவு தண்ணீர் அள்ளித் தமது இடது காலையும் கழுவினார்கள்.

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)