ஜுன்துப் (ரழி) அவர்கள் கூறியதாவது:
ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வஹீயுடன்) வருவது தாமதமானது. எனவே இணைவைப்பாளர்கள், "முஹம்மது கைவிடப்பட்டுவிட்டார்" என்று கூறினர். அப்போது, கண்ணியமும் வல்லமையும் மிக்க அல்லாஹ் (பின்வரும் வசனங்களை) அருளினான்:
{வள்ளுஹா * வல்லைலி இதா ஸஜா * மா வத்தஅக்க ரப்புக்க வமா கலா}
(பொருள்: "(பிரகாசமான) முற்பகல் மீதும், (அமைதி பெறும்) இரவின் மீதும் சத்தியமாக! உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; அவன் (உம் மீது) கோபம் கொள்ளவுமில்லை.")