நபி (ஸல்) அவர்கள் (மக்கா) வெற்றியின் நாளில் ஒரே உளூவுடன் தொழுகைகளைத் தொழுதார்கள்; மேலும் காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள் அவரிடம், “தாங்கள் இதற்கு முன் வழக்கமாகச் செய்யாத ஒன்றை இன்று செய்துள்ளீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமரே! நான் அதை வேண்டுமென்றேதான் செய்தேன்” என்று கூறினார்கள்.