இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

378சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو عَامِرٍ الأَشْعَرِيُّ عَبْدُ اللَّهِ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُمِّ هَانِئٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ اغْتَسَلَ وَمَيْمُونَةُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ فِي قَصْعَةٍ فِيهَا أَثَرُ الْعَجِينِ ‏.‏
உம்மு ஹானி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்களும் மைமூனா (ரழி) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளித்தார்கள். அது மாவு பிசைந்ததின் சில அடையாளங்கள் இருந்த ஒரு பெரிய கிண்ணமாகும்.

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
31அஷ்-ஷமாயில் அல்-முஹம்மதிய்யா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ نَافِعٍ الْمَكِّيِّ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ‏:‏ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ذَا ضَفَائِرَ أَرْبَعٍ‏.‏
உம்மு ஹானி (ரழி) கூறினார்கள்:
“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான்கு சடைகளுடன் கண்டேன்.”

ஹதீஸ் தரம் : பலவீனமான அறிவிப்பாளர் தொடர் (ஸுபைர் அலீ ஸயீ)