ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் மாதவிடாயிலிருந்து குளிப்பது பற்றிக் கேட்டாள். நபி (ஸல்) அவர்கள் எப்படிக் குளிக்க வேண்டும் என்று அவளுக்குக் கூறி, "கஸ்தூரி மணம் ஊட்டப்பட்ட ஒரு துணித்துண்டால் உன்னைச் சுத்தப்படுத்திக் கொள்" என்று கூறினார்கள். அப்பெண், "நான் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்வது?" என்று கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதனால் சுத்தப்படுத்திக் கொள்" என்றார்கள். அப்பெண், "எப்படி?" என்று (மீண்டும்) கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சுப்ஹானல்லாஹ்! சுத்தப்படுத்திக் கொள்" என்று கூறினார்கள். (அப்போது) நான் அவளை என் பக்கம் இழுத்து, "இரத்தம் பட்ட இடத்தை அதனால் துடைத்துக்கொள்" என்று கூறினேன்.