உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: ஒரு மலையின் உச்சியில் ஆடு மேய்ப்பவர் பாங்கு சொல்லி, தொழுகை நிறைவேற்றுவதைக் கண்டு அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான். உயர்ந்தவனான அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய இந்த அடியானைப் பாருங்கள்; அவன் பாங்கு சொல்லி, தொழுகையை நிறைவேற்றுகிறான், மேலும் எனக்கு அஞ்சுகிறான். ஆகவே, நான் அவனை மன்னித்து, அவனை சொர்க்கத்தில் நுழையச் செய்கிறேன்.