உஸ்மான் இப்னு அபுல்ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதரே! என் கூட்டத்தாருக்குத் தொழுகை நடத்தும் தலைவராக என்னை நியமியுங்கள், என்று (நான்) கேட்டேன். அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: நீர் அவர்களின் தலைவர், ஆனால் அவர்களில் மிகவும் பலவீனமானவரைப் பின்பற்றி (தொழுகையை) நடத்துவீராக; மேலும், அதான் கூறுவதற்காகக் கூலி வாங்காத ஒரு முஅத்தினை நியமிப்பீராக.