அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வாங்குவதையும் விற்பதையும், காணாமல் போன பொருளைப் பற்றி உரக்க அறிவிப்பதையும், அதில் கவிதை வாசிப்பதையும் தடைசெய்ததோடு, வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்கு முன்னர் (பள்ளிவாசலில்) வட்டமாக அமர்வதையும் தடை செய்தார்கள்.