அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது, (சுத்ரா இல்லையெனில்) தமக்கு முன்னாள் எவரையும் கடந்து செல்ல அவர் அனுமதிக்கக் கூடாது. மேலும், முடிந்தவரை அவரை விலக்க முயல வேண்டும், ஆனால் அவர் செல்ல மறுத்தால், அவரை வலுக்கட்டாயமாக விலக்க வேண்டும், ஏனெனில் அவன் ஒரு ஷைத்தான் ஆவான்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது, தனக்கு முன்னாள் எவரையும் கடந்து செல்ல அவர் அனுமதிக்க வேண்டாம். அவர் (கடந்து செல்பவர்) மறுத்தால், அவரை பலவந்தமாகத் தடுக்கட்டும். ஏனெனில் அவருடன் ஷைத்தான் இருக்கிறான்.
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவர் தொழுதுகொண்டிருந்தபோது, மர்வானின் மகன் ஒருவர் அவருக்கு முன்னால் கடந்து செல்ல முயன்றார். அவர் அவனைத் தடுக்க முயன்றார், ஆனால் அவன் பின்வாங்கவில்லை. எனவே, அவர் அவனை அடித்தார். அந்தச் சிறுவன் அழுதுகொண்டே வெளியே சென்று, மர்வானிடம் (நடந்ததை) கூறினான். மர்வான், அபூ சயீத் (ரழி) அவர்களிடம், "உங்கள் சகோதரனின் மகனை ஏன் அடித்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர், "நான் அவனை அடிக்கவில்லை, மாறாக சைத்தானைத்தான் அடித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது, அவருக்கு முன்னால் யாராவது கடந்து செல்ல முயன்றால், முடிந்தவரை அவரைத் தடுக்கட்டும். அவர் விடாப்பிடியாக இருந்தால், அவருடன் போராடட்டும். ஏனெனில், அவன் ஒரு சைத்தான் ஆவான்' என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்" என்று கூறினார்.
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது, தனக்கு முன்னால் யாரையும் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம்; முடிந்தவரை அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும்; ஆனால் அவர் (செல்ல) மறுத்தால், அவருடன் போராட வேண்டும், ஏனெனில் அவன் ஒரு ஷைத்தான் மட்டுமே.
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيُصَلِّ إِلَى سُتْرَةٍ. وَلْيَدْنُ مِنْهَا. وَلاَ يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ. فَإِنْ جَاءَ أَحَدٌ يَمُرَّ فَلْيُقَاتِلْهُ. فَإِنَّهُ شَيْطَانٌ .
அப்துர்-ரஹ்மான் இப்னு அபூ ஸயீத் (ரழி) அவர்கள் தங்களின் தந்தை கூறியதாக அறிவித்தார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் தொழும்போது, அவர் ஒரு சுத்ராவை முன்னோக்கித் தொழட்டும், மேலும் அதன் அருகில் செல்லட்டும், தனக்கு முன்னாள் எவரையும் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம். யாராவது வந்து அவருக்கு முன்னாள் கடந்து செல்ல விரும்பினால், அவர் அவனுடன் போராடட்டும், ஏனெனில் அவன் ஒரு ஷைத்தான் ஆவான்.'”
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவர் தொழும்போது, தமக்கு முன்னாள் எவரையும் கடந்து செல்ல அவர் அனுமதிக்க வேண்டாம். அவர் வற்புறுத்தினால் அவருடன் போராடட்டும், ஏனெனில் அவனுடன் ஒரு கரீன் (ஷைத்தான்-துணை) இருக்கிறான்.”
யஹ்யா அவர்கள் எனக்கு மாலிக் அவர்களிடமிருந்தும், அவர் ஸைத் இப்னு அஸ்லம் அவர்களிடமிருந்தும், அவர் அப்துர்-ரஹ்மான் இப்னு அபீ ஸயீத் அல்-குத்ரீ அவர்களிடமிருந்தும், அவர் தம் தந்தையார் அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாகத் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்களுக்கு முன்னால் எவரும் கடந்து செல்ல அனுமதிக்காதீர்கள். உங்களால் முடிந்தவரை அவரைத் தடுங்கள். அவர் மறுத்தால், அவரை எதிர்த்துப் போராடுங்கள், ஏனெனில் அவன் ஒரு ஷைத்தான் ஆவான்."