حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، عَنِ ابْنِ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي يَوْمَ الْفَتْحِ وَوَضَعَ نَعْلَيْهِ عَنْ يَسَارِهِ .
அப்துல்லாஹ் இப்னு அஸ்-ஸாயிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்க, தங்களின் காலணியைத் தங்களின் இடது பக்கத்தில் வைத்திருந்ததை நான் பார்த்தேன்.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَلَّى يَوْمَ الْفَتْحِ فَجَعَلَ نَعْلَيْهِ عَنْ يَسَارِهِ .
அப்துல்லாஹ் பின் ஸாஇப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“மக்கா வெற்றியின் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்தேன், மேலும் அவர்கள் தங்களின் காலணிகளை தங்களின் இடதுபுறத்தில் வைத்திருந்தார்கள்.”