அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதல் வரிசையை முழுமைப்படுத்துங்கள், பிறகு அதற்கு அடுத்த வரிசையை (முழுமைப்படுத்துங்கள்). ஏதேனும் குறைபாடு இருந்தால், அது கடைசி வரிசையில் இருக்கட்டும்.
وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أتموا الصف المقدم، ثم الذي يليه، فما كان من نقص فليكن في الصف المؤخر . ((رواه أبو داود بإسناد حسن)).
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "முதல் வரிசையை நிரப்புங்கள், பிறகு அதற்கு அடுத்துள்ள வரிசையை (நிரப்புங்கள்); ஏதேனும் குறைபாடு (முழுமையற்ற நிலை) இருந்தால், அது கடைசி வரிசையில் இருக்கட்டும்."