நான் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களுடன் ஜும்ஆ தொழுகையை தொழுதேன். நாங்கள் (மக்கள் கூட்டத்தால்) தூண்களை நோக்கித் தள்ளப்பட்டோம். அதனால், நாங்கள் முன்னும் பின்னுமாக நின்றோம். பிறகு அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அதை (தூண்களுக்கு இடையில் வரிசை அமைப்பதை) தவிர்த்து வந்தோம்.