ஒருமுறை இகாமத் சொல்லப்பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை முன்னோக்கி, "உங்கள் வரிசைகளை நேராக்குங்கள்; மேலும் நெருக்கமாக நில்லுங்கள். ஏனெனில், நான் உங்களை என் முதுகுக்குப் பின்னாலிருந்து பார்க்கிறேன்" என்று கூறினார்கள்.
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَقِيمُوا صُفُوفَكُمْ فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي . وَكَانَ أَحَدُنَا يُلْزِقُ مَنْكِبَهُ بِمَنْكِبِ صَاحِبِهِ وَقَدَمَهُ بِقَدَمِهِ.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்கள் வரிசைகளை நேராக்குங்கள்; ஏனெனில், நான் என் முதுகுக்குப் பின்னாலிருந்தும் உங்களைப் பார்க்கிறேன்."
அனஸ் (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள், "எங்களில் ஒவ்வொருவரும் தம் தோழரின் தோளோடு தம் தோளையும், தம் தோழரின் பாதத்தோடு தம் பாதத்தையும் சேர்த்துக் கொள்வார்கள்."
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، - رضى الله عنه - قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَجْهِهِ حِينَ قَامَ إِلَى الصَّلاَةِ قَبْلَ أَنْ يُكَبِّرَ فَقَالَ أَقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றபோது, தக்பீர் கூறுவதற்கு முன்பு எங்களை முன்னோக்கிக் கூறினார்கள்: 'உங்கள் வரிசைகளை நேராக்கி, ஒருவருக்கொருவர் நெருங்கி நில்லுங்கள். ஏனெனில், என் முதுகுக்குப் பின்னாலும் நான் உங்களைக் காண்கிறேன்.'"