உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களின் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஹும்ரான் (அவர்கள்), உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்கள் வாயிலாக, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:
எவர் தொழுகைக்காக உளூ செய்து, அதை முறையாகச் செய்து, பின்னர் கடமையான தொழுகையை (நிறைவேற்ற)ச் சென்று, மக்களுடன் சேர்ந்தோ அல்லது ஜமாஅத்துடனோ அல்லது பள்ளிவாசலிலோ அதை நிறைவேற்றினாரோ, அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்துவிடுவான்.