حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ ـ رضى الله عنهما ـ كَانُوا يَفْتَتِحُونَ الصَّلاَةَ بِ ـ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ}
அனஸ் (ரழி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரழி) அவர்களும், உமர் (ரழி) அவர்களும் தொழுகையை 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' (எல்லாப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே) (என்ற சூரத்துல் ஃபாத்திஹாவின் முதல் வசனத்துடன்) ஆரம்பிப்பார்கள்.
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الزُّهْرِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعَ أَبِي بَكْرٍ وَعُمَرَ - رضى الله عنهما - فَافْتَتَحُوا بِـ { الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ }
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: 'நான் நபி (ஸல்) அவர்களுடனும், அபூபக்கர் (ரழி) மற்றும் உமர் (ரழி) ஆகியோருடனும் தொழுதேன். அவர்கள் 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' (என்ற வசனத்தைக் கொண்டு சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி) ஆரம்பித்தார்கள்.'
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ كَانُوا يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِـ { الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ } .
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரும் (தொழுகையில்) ஓதுதலை “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று தொடங்குவார்கள்.