"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களிடம் வந்து, அவர்களின் பாதத்தில் என் கையை வைத்து, 'எனக்கு ஸூரா ஹூத்தையும், ஸூரா யூஸுஃபையும் கற்றுக் கொடுங்கள்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம், “கூறுவீராக: அதிகாலையின் இறைவனிடம் நான் காவல் தேடுகிறேன்” என்பதை விட மேலான எதையும் நீர் ஒருபோதும் ஓதமாட்டீர்' என்று கூறினார்கள்."