அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
லுஹர் தொழுகை துவங்கும், ஒருவர் அல்-பகீஃக்குச் சென்று, தமது தேவையை நிறைவேற்றிய பின்னர் உளூச் செய்துவிட்டுத் திரும்பி வருவார்; அப்பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் இருப்பார்கள், ஏனெனில் அவர்கள் அதனை அவ்வளவு நீட்டுவார்கள்.