حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أُمِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلاَ يَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا الْجَبْهَةِ وَالْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالرِّجْلَيْنِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யவும், (தொழுகையின்போது) தமது ஆடையையோ முடியையோ சுருட்டிக் கொள்ளாமலும் இருக்கும்படியும் (அல்லாஹ்வால்) கட்டளையிடப்பட்டார்கள். அந்த உறுப்புகளாவன: நெற்றி (மூக்கின் நுனியுடன் சேர்த்து), இரு கைகள், இரு முழங்கால்கள் மற்றும் இரு பாதங்களின் (விரல்கள்) ஆகும்.
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ ـ وَهْوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أُمِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَلاَ يَكُفَّ ثَوْبَهُ وَلاَ شَعَرَهُ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஏழு எலும்பு உறுப்புகள் மீது ஸஜ்தா செய்யுமாறும், தங்களின் ஆடையையோ முடியையோ ஒதுக்கிக் கட்டாமல் இருக்குமாறும் கட்டளையிடப்பட்டார்கள்.
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ الْمَكِّيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أُمِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَنُهِيَ أَنْ يَكُفَّ الشَّعْرَ وَالثِّيَابَ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் ஏழு எலும்புகளின் மீது ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிடப்பட்டார்கள்; மேலும் தமது தலைமுடியையும் ஆடையையும் சுருட்டிக்கொள்வதை விட்டும் தடுக்கப்பட்டார்கள்."
நபி (ஸல்) அவர்கள், ஒருவர் ஏழு எலும்புகளின் மீது ஸஜ்தா செய்ய வேண்டும் என்றும், அவர் தமது முடியையோ ஆடையையோ சுருக்கிக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிட்டார்கள்.