حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ . قَالَ قُلْتُ حَتَّى يَقُومَ قَالَ حَتَّى يَقُومَ .
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் முதல் இரண்டு ரக்அத்துகளில் (முதல் அத்தஹிய்யாத்தில்) சூடான கற்களின் மீது இருப்பது போன்று (நீண்ட நேரம் அமராமல், விரைவாக) இருந்தார்கள்.
(அறிவிப்பாளர்) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான், "(நபி (ஸல்) அவர்கள்) எழுந்து நிற்கும் வரையா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "எழுந்து நிற்கும் வரைதான்" என்று கூறினார்.